மாநாட்டிற்கு சென்றபோது தகராறு பா.ம.க.,வினர் 2 பேர் கைது
விழுப்புரம் : திண்டிவனத்தில், மாநாட்டிற்கு சென்றபோது போலீசாரிடம் தகராறு செய்த வழக்கில் பா.ம.க., வினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை அருகே, நேற்று முன்தினம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடந்த பா.ம.க., சித்திரை முழு நிலவு மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு, வேனில் வந்த அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் வேனின் மீது ஏறி ஆடியபடி சென்றனர். இதனால், வேனை நிறுத்திய டிரைவர், அவர்களை கீழே இறங்கும்படி கூறினார்.
கீழே இறங்கிய அவர்கள், தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஆட்டம் போட்டனர்.
அப்போது, அங்கு ரோந்து வந்த திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் அவரது டிரைவர் காவலர் சவுந்தரராஜன் உள்ளிட்ட போலீசார், சாலையில் ஆடியவர்களை கலைந்து போகும்படி கூறியதால், வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர் சவுந்தரராஜனை நெட்டித் தள்ளியுள்ளனர். பின், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர் சவுந்தர்ரராஜன், ரோஷணை போலீசில் அளித்த புகாரின் பேரில், பா.ம.க., வினர் 4 பேர் மீது, வழக்குப் பதிந்து ஜெயங்கொண்டம் அடுத்த கழுவந்தோண்டி பகுதியைச் சேர்ந்த கனகசபை மகன் வெங்கடேசன், 35; மணிமொழி மகன் ராஜா, 29; ஆகிய இருவரை நேற்று கைது செய்து, திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
ரூ.3,400 கோடி சொகுசு விமானம்; டிரம்பிற்கு கத்தார் அரசு பரிசு
-
அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை
-
முதல்வருடன் துணைவேந்தர் சந்திப்பு
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது