ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் நுாறு சதவீதம் தேர்ச்சி

மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் 10, பிளஸ் ௨ வகுப்பு, அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் பாராட்டினார்.

இப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை கொடுத்துள்ளனர்.

பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., மாணவி கீர்த்தனா 500க்கு 416 மதிப்பெண், மேகலா 408, ஸ்ரீதரன் 404 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களை பிடித்தனர்.

இதே போன்று பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர் கோகுல கிருஷ்ணன் 500க்கு 460 மதிப்பெண், மாணவர் பரத் 441, மாணவி பவித்ரா 435 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்தனர்.

மேலும் 10ம் வகுப்பில் 15 பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 7 பேர் 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர்.

சிறப்பிடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் பழனியப்பன், முதுநிலை முதல்வர் அகிலா, ஹோலி ஏஞ்சல் பள்ளி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் கீர்த்தி வாசன், பள்ளி முதல்வர் ஏரோமிஸ் பிஸ்காட், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement