தொழிலாளி விபரீத முடிவு



காங்கேயம்,காங்கேயத்தில், தாராபுரம் சாலை, கோட்டைமேட்டை சேர்ந்த தேவராஜ் மகன் சிவராஜ், 25; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் உணவு அருந்திவிட்டு வீட்டில் துாங்க சென்றார்.

விடியற்காலையில் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, உள்பக்க அறையில் துாக்கிட்ட நிலையில் தொங்கினார். அவரை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement