விளக்க உரையுடன் குறள் கடைகளுக்கு உத்தரவு

ஈரோடு, ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், இதர நிறுவனங்கள் தமிழில் திருக்குறள், விளக்க உரையுடன் எழுத, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கான வெள்ளி விழாவின்போது உத்தரவிடப்பட்டது.
தினமும் ஒரு குறள் என்ற அடிப்படையில், பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன் பெறும் வகையில், அனைத்து தொழிலாளர்களும் அறியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இதுபற்றி வேலையளிப்போர் அமைப்புகளிடமும், தொழிலாளர் நிறுவனங்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement