குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கொளத்துாரில் திறப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சி, ஜெ.ஜெ., நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது, கோடை காலத்தையொட்டி, அப்பகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தி தர வேண்டி, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, ஜே.கே. டயர் தனியார் நிறுவனம் வாயிலாக, தனியார் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ், 7.43 லட்சம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இதை, ஜே.கே. டயர் நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்ட மேலாளர் சகாயராஜ் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஜே.கே. டயர் நிறுவனத்தின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement