திருப்பதி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஓய்வு மண்டபம்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான சோளீஸ்வரர் கோவில் கனகம்மாசத்திரம் அடுத்த ஆற்காடு குப்பத்தில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு, திருத்தணி, ஆற்காடுகுப்பம், லட்சுமாபுரம், நெடும்பரம், ராமலிங்கபுரம், இலுப்பூர், இல்லத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

இது தவிர, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, சிவராத்திரி, பவுர்ணமி போன்ற முக்கிய விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர்.

அதேபோல் சென்னை, திருவள்ளூரில் இருந்து திருப்பதிக்கு பாதையாத்திரையாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் தங்கி சென்று வருகின்றனர்.

இங்கு பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கி இளைப்பாற மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஓராண்டுக்கு முன் சோளீஸ்வரர் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.

தற்போது 3 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டு கடந்த ஜூலையில் டெண்டர் விடப்பட்டது. தற்போது கட்டடம் கட்டும் பணி விறு நடந்து வருகிறது.

Advertisement