குழந்தையின் தொண்டையில் சிக்கிய நாணயம் அகற்றம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 4 வயது பெண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய, ஒரு ரூபாய் நாணயத்தை டாக்டர்கள் அகற்றினர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் பூவதி வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த, 4 வயதான பெண் குழந்தை சாரா. இவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக, ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கினார். அருகில் உள்ள மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்தபோது, குழந்தையின் தொண்டையில் நாணயம் சிக்கியது தெரிந்தது.
குழந்தையின் பெற்றோர் அவசர சிகிச்சைக்காக உடனடியாக கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லுாரியில் கடந்த, 9 மதியம், 1:00 மணியளவில் குழந்தையை சேர்த்தனர். மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி, அவசர அறுவை சிகிச்சை குழு அமைக்கப்பட்டு அன்று மாலை, 4:00 மணிக்கு, உணவுக் குழாய் உள்நோக்கி கருவி மூலம், ஒரு ரூபாய் நாணயம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
தொடர் சிகிச்சைக்கு பின் குழந்தை நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவசர அறுவை சிகிச்சை குழுவில், மயக்க மருத்துவத்துறை தலைவரும், இணை பேராசிரியருமான சங்கீதா, மயக்க மருத்துவ நிபுணர் நவீன்குமார் மற்றும் காது-, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியர்கள் சுஜய்குமார், வினோத்குமரன், சபரீஷ், தினேஷ் மற்றும் அவசர சிகிச்சை துறை மருத்துவர் சதீஷ், செவிலியர் குண
சுந்தரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Advertisement