ஜி.உடையாபட்டியில் நாளை மக்கள் தொடர்பு முகாம்
கரூர், தோகைமலை அருகில், கூடலுார் கிராமம், ஜி.உடையாபட்டியில் மக்கள் தொடர்பு முகாம், நாளை நடக்கிறது என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தோகைமலை அருகில், கூடலுார் கிராமம் ஜி.உடையாபட்டியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், நாளை (15ம் தேதி) காலை 11:00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு விழா நடக்கிறது. முகாமில் பல்வேறு அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்று, துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்து கூற உள்ளனர். மருத்துவ முகாம், அரசுத்துறைகள் சார்பாக கண்காட்சி நடக்கிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement