இணைப்பு சாலையில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் இடையூறு

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த வல்லுார் சாலை சந்திப்பில் இருந்து மணலி செல்லும் எண்ணுார் விரைவு சாலையின் இருபுறமும் இணைப்பு சாலைகள் உள்ளன.

இந்த இணைப்பு சாலையில் கனரக வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த சாலையை பயன்படுத்துபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

லாரிகளுக்கு இடையே புகுந்து செல்லும் நிலை உள்ளது. ஒரு சில இடங்களில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகின்றன.

மற்ற வாகனங்கள் பயணிக்க முடியாத அளவிற்கு, இணைப்பு சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement