நாளை இலவச தொழிற்பயிற்சி பெண்களுக்கு நேர்முகத்தேர்வு
ராசிபுரம்,மத்திய அரசின், தேசிய வள அமைப்பான அகமதாபாத்தை சேர்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் பெண்களுக்கான இலவச தொழில் பயிற்சியை வழங்க உள்ளது.
இதில், 18 வயதுக்கு மேற்பட்ட, 45 வயதுக்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. துணி, சணல் பொருட்களிலிருந்து தையல், லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், பர்ஸ், பைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்கான ஒருமாத கால இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முக தேர்வு, நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள், 8825812528, 9597491158 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!