இரு தரப்பினர் மோதலால் மூடிய கோவில் உயர்நீதிமன்ற உத்தரவு படி திறப்பு
கிருஷ்ணகிரி :கோவில் கட்டுவதில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் நடந்த மறுநாளே மூடப்பட்ட கோவில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி நேற்று திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த பூவத்தி பஞ்.,ல், சிக்கபூவத்தி, குருதொட்டனுார், உப்புக்குட்டை, மிட்டப்பள்ளி, கெட்டூர் உள்ளிட்ட, 9க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், 3 சமூகத்தினர் சேர்ந்து கட்டிய, கொல்லி மாரியம்மன், மண்டு மாரியம்மன் கோவில், பசேவேஸ்வரர் கோவில், 3.43 ஏக்கர் பரப்பிலுள்ள கோவில் நிலத்தில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இம்மூன்று சமூகத்தினர் திருவிழா நடத்தி வருகின்றனர். கோவில் நிலத்தில், 12 அம்மன்களுக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன.
அங்குள்ள பசேவேஸ்வரர் கோவிலை புதுப்பித்து கடந்த ஏப்., 11ல் கும்பாபிஷேகம் செய்தனர். இந்நிலையில், பூவத்தி பஞ்.ல், வசிக்கும் மற்றொரு சமுதாய மக்கள், கோவில் காலி நிலத்தில், தனியாக கோவில் கட்டி கொள்கிறோம் எனக்
கூறினர். இதனால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கடந்த ஏப்., 9ல் நடந்த சமாதான பேச்சிலும் உடன்பாடு எட்டவில்லை. மற்றொரு தரப்பில் புதிய கோவில் கட்ட கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும் நடப்பதாக அறிவித்தனர். இதனால் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், கோவிலை யாரும் உரிமை கோர முடியாது எனக்கூறி, கோவிலை பூட்டி, அப்பகுதிக்கு, 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் கும்பாபிஷேகம் நடந்த மறுநாளே, பசேவேஸ்வரர் கோவில் மற்றும் மண்டு மாரியம்மன் கோவில்கள் பூட்டப்பட்டன.
இந்நிலையில் பசவேஸ்வரர் கோவில் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவிலை திறக்கவும், வழக்கம் போல் பூஜை நடக்கவும் கோரி, வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாரத சக்ரவர்த்தி, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில்களை உடனடியாக திறந்து, வழக்கம் போல் பூஜை நடக்க வேண்டும். புதிதாக கோவில் கட்ட கோருபவர்கள் கருத்தை தெரிவிக்கலாம். ஆனால், பூட்டப்பட்ட கோவில்கள் உடனடியாக திறக்க வேண்டும். மாவட்ட போலீசார் பாதுகாப்பில், ஹிந்து சமய அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகத்தினர் முன்னிலையில் கோவிலை உடனடியாக திறக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும், ஜூன், 17க்கு ஒத்தி வைத்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை, கிருஷ்ணகிரி மண்டல உதவி கமிஷனர் ராமுவேல் தலைமையில், ஆய்வாளர்கள், அண்ணாதுரை, ராமமூர்த்தி, பூவரசன், சக்தி, அருள்மணி, வெங்கடாசலம் கவிபிரியா, செயல் அலுவலர்கள் சித்ரா, சிவக்குமார், சாமிதுரை, சத்யா, செந்தில், ரகுவர ராஜ்குமரன் மற்றும் அலுவலர்கள் பூட்டப்பட்ட கோவில்களை நேற்று திறந்தனர். தொடர்ந்து கோவில்களில் பூஜை நடந்தது. இதில் பூவத்தியை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, தாலுகா இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!