ஓராண்டில் ரூ.11 கோடிக்கு வாழைத்தார் விற்பனை
கோபி:கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ஓராண்டில், 11.84 லட்சம் வாழைத்தார், 11 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. சுற்று வட்டார பகுதி விவசாயிகள் வாழைத்தார்களை ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர். சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, அவிநாசி பகுதி வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த, 2024 ஏப்.,1 முதல், நடப்பாண்டு மார்ச் 31 வரையான ஓராண்டில், கதளி, நேந்திரன் பழங்கள், 66 டன்; பூவன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், பச்சைநாடான், ரொபஸ்டா ரக பழங்கள், 11.84 லட்சம் வாழைத்தாரும் விற்றுள்ளது. கதளி, நேந்திரன் உட்பட மொத்தம் ஒன்பது ரக பழங்கள், 11.05 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இதன் மூலம், 23 ஆயிரத்து, 717 விவசாயிகள், 4,572 வியாபாரிகள் பயன் பெற்றதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!