போக்குவரத்து வசதியை மேம்படுத்த வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு

கும்மிடிப்பூண்டி:தமிழக நெடுஞ்சாலை துறையினர் சார்பில், வாகன போக்குவரத்தின் வசதியை மேம்படுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாநில நெடுஞ்சாலைகளில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வாகன போக்குவரத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலையை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்துவது உள்ளிட் பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருவள்ளூர் மாவட்ட கோட்ட பொறியாளர் சிற்றரசு உத்தரவின் பேரில், நெடுஞ்சாலை துறையின் கும்மிடிப்பூண்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகளில், வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலை, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை, கும்மிடிப்பூண்டைி - மாதர்பாக்கம் சாலை, புதுவாயல் - பெரியபாளையம் சாலை, நாகராஜகண்டிகை - சிறுபுழல்பேட்டை சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இதர மாவட்ட சாலைகளில் தற்போது வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு சாலையிலும், பந்தலிட்டு அமர்ந்துள்ள இருவர், அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களை கணக்கிட்டு வருகின்றனர். ஒரு வார காலத்திற்கு இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும் என, நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement