இன்ஜினியர் வீட்டில் ரூ.12 லட்சம், 9 பவுன் நகை கொள்ளை



சேலம் :சேலம், சிவதாபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர், 53. சிவில் இன்ஜினியரான இவருக்கு, அதே பகுதியில் சொந்த வீடு உள்ளது. இருப்பினும், அருகே வீடு வாடகைக்கு எடுத்து, குடும்பத்துடன் வசிக்கிறார்.


இடையில் சொந்த வீட்டிலும் தங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு ரவிசங்கர் உள்ளிட்ட குடும்பத்தினர் சொந்த வீட்டில் துாங்கினர். நேற்று காலை வாடகை வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு ரவிசங்கர் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த, 12 லட்சம் ரூபாய், 9 பவுன் நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிந்தது. அவர் தகவல்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர்.

Advertisement