கள்ளக்காதலி வெட்டி கொலை போலீசில் பைனான்சியர் சரண்

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை அருகே, கள்ளக்காதலியை வெட்டி கொலை செய்த பைனான்சியர், போலீஸில் சரணடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கர் பாஷா, 45. இவரது மனைவி சாந்தினி, 42. தம்பதிக்கு, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் சாந்தினி, கடந்த, 8 ஆண்டுகளுக்கு மேலாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அணைக்கட்டு பகுதியிலுள்ள ஒரு ஒட்டலில் பணியாற்றி வந்தபோது, அங்கு சாப்பிட வந்த வாலாஜாவை சேர்ந்த பைனான்சியர் காமேஷ், 43, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த, 7 ஆண்டுகளாக தம்பதியாக, வாடகை வீட்டில் தனிக்

குடித்தனம் நடத்தி வந்தனர்.


இந்நிலையில் காமேஷ், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதில், சாந்தினிக்கும், காமேஷூக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும், சாந்தினி தன் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய, காமேஷிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த காமேஷ், நேற்று காலை கத்தியால், சாந்தினியை வெட்டி கொலை செய்து விட்டு, வாலாஜா போலீசில் சரணடைந்தார். போலீசார், காமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement