தடுப்புகள் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மேனலூர் கிராமத்தில் இருந்து, அரசாணிமங்கலம் செல்லும் சாலை உள்ளது. மேனலூர் கிராமத்தில் இச்சாலையின் குறுக்கே செல்லும் நீர்வரத்து கால்வாய் மீது, பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த பாலத்தின் வழியே தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, இந்த பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இல்லாமல் உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் நிலைத்தடுமாறி, 10 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், பாலம் அமைந்துள்ள பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதி, பாலத்தில் தடுப்புகள் அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!
-
இழப்பீடு வழங்க தாமதப்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு