7 நகரங்களுக்கு விமான சேவை ரத்து

புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நம் நாட்டில் கடந்த வாரம் முதல் தற்காலிகமாக மூடப்பட்ட 32 எல்லையோர விமான நிலையங்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் செயல்பட துவங்கின.

எனினும் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு கருதி ஏழு நகரங்களுக்கு செல்லும் ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்களின் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட்டுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

Advertisement