கஞ்சா விற்றதாக சட்ட மாணவர் உட்பட 2 பேர் கைது
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் கஞ்சா விற்றதாக சட்டக்கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இம்மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தை ஒழிப்பதற்காக போலீஸ் எஸ்.பி., ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக போலீசாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அருமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் இருவரில் ஒருவர் கையில் இருந்த பொட்டலத்தை குளத்தில் வீசினார். மற்றொருவர் வைத்திருந்த ஒரு பொட்டலத்தில் கஞ்சா இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் அருமனை அருகே குஞ்சாலிவிளையைச் சேர்ந்த மணிகண்டன் 24, பனங்கரை குளத்தேரிவிளையைச் சேர்ந்த ஸ்டாலின் 21, என்பதும் தெரிய வந்தது. மணிகண்டன் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி., படிக்கிறார். இவர் இரண்டாவது முறையாக கஞ்சா வழக்கில் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 170 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.