'மிடில் பெர்த்' கழன்று விழுந்து ரயிலில் சென்னை பெண் காயம்
சேலம்:சங்கிலியை சரியாக மாட்டாததால், எக்ஸ்பிரஸ் ரயிலில் நடுவில் உள்ள படுக்கை கழன்று விழுந்ததில், சென்னையை சேர்ந்த பெண் காயமடைந்தார்.
சென்னையில் இருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மே 11 இரவு, 9:40க்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து, 'எஸ் 5 ஸ்லீப்பர்' பெட்டியில், சென்னை, முகலிவாக்கம், குமாரசாமி தெருவை சேர்ந்த ஜோதி, 50, அவரது மனைவி சூர்யா, 39, மற்றும், 14 வயது மகன் பயணித்தனர்.
சூர்யா கீழ் படுக்கையில் படுத்திருந்தார். ரயில் நள்ளிரவு ஜோலார்பேட்டையை கடந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது, 'மிடில் பெர்த்' கொக்கி கழன்று விழுந்து, சூர்யா தலையில் அடித்தது. இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது.
பெட்டியில் முதலுதவி சாதனங்கள் கூட இல்லாததால், ரயில்வே அதிகாரிகளிடம், பயணியர் வாக்குவாதம் செய்தனர். அதிகாலை, 3:00 மணிக்கு, ரயில் சேலம் வந்ததும், பெண்ணுக்கு முதலுதவி அளித்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின், அவர் வீடு திரும்பினார்.
தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: ரயிலில் நடு பெர்த் விழுந்து பயணி காயமடைந்தார். மொரப்பூர் ஸ்டேஷனில் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் இறங்க மறுத்தார். தொடர்ந்து சேலத்தில் இறங்கி முதலுதவிக்கு பின், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பெட்டிகளை, ரயில்வே அதிகாரிகள் சோதனை நடத்தினர். சங்கிலி சரியாக மாட்டப்படாததால், படுக்கை கழன்று விழுந்தது தெரியவந்தது. பயணியர், படுக்கையை மாட்டும் கொக்கியை, சரியாக கையாள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!