ஆடல், பாடல் நிகழ்ச்சியில் போலீசார் தடியடி

நாட்றம்பள்ளி:கோவில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சியில், வாலிபர்களுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளியில், சித்ரா பவுர்ணமியையொட்டி அங்குள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் விழா நடந்தது. இதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மைதானத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தபோது, வாலிபர்களும் மதுபோதையில் பாடலுக்கு ஏற்ப நடனமாடினர்.

அப்போது, அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த நாட்றம்பள்ளி போலீசார் தடியடி நடத்தி, அவர்களை விரட்டியடித்தனர்.

Advertisement