தொடர வேண்டும்!

எல்லையில் வசிக்கும் மக்கள் அமைதியாக வாழ விரும்புவதால், இந்தியா - பாக்., இடையே போர் நிறுத்தம் அப்படியே தொடர வேண்டும். ஒரு சிலருக்கு மட்டுமே போர் நிறுத்தம் பிடிக்கவில்லை. மற்றபடி, காஷ்மீர் மக்கள் அனைவரும் போர் நிறுத்தத்தை விரும்புகின்றனர்.

ஒமர் அப்துல்லா

ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

கேள்வி கேட்போம்!



இந்தியா - பாக்., மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தம்பட்டம் அடிக்கிறார். ஆனால், இதை மத்திய அரசு மறுக்கிறது. இது மிகவும் தீவிரமான பிரச்னை. அனைத்து கட்சி கூட்டம் நடக்கும் போது, டிரம்ப் கூறியது பற்றி மத்திய அரசிடம் கேள்வி கேட்போம்.

மல்லிகார்ஜுன கார்கே

தேசிய தலைவர், காங்.,

இது புதிய இந்தியா!



நம் நாடு அமைதியை விரும்புகிறது. அதற்காக பயங்கரவாதிகளின் அட்டூழியங்களை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியிலேயே, அவர்களது இடத்துக்கே சென்று உரிய பதிலடி கொடுத்துள்ளோம். இது, புதிய இந்தியா என்பதை உலகம் உணர்ந்துள்ளது.

தருண் சக்

தேசிய பொதுச்செயலர், பா.ஜ.,

Advertisement