சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்

செஞ்சி : செத்தவரை மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

செஞ்சி அடுத்த செத்தவரை, நல்லாண் பிள்ளை பெற்றாள் சிவ ஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, மீனாட்சி அம்மன், சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.

காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியும், ஊர் மக்கள் சார்பில் அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement