திருக்கோஷ்டியூரில் பிரமோற்ஸவம் நிறைவு

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருள பிரம்மோற்ஸவம் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 12 நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை பல்லக்கிலும், இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
ஆறாம் திருநாளில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், பெருமாள் அவதார நட்சத்திரத்தில் பத்தாம் திருநாளான மே10 ல் சித்திரைத் தேரோட்டம் நடந்தது. பதினொராம் நாளில் பிரணகலயமும், புஷ்பயாகமும் நடந்தது. 12ம் நாள் புஷ்ப பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி தேரோடும் வீதியில் வலம் வந்தார். தொடர்ந்து சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளி பிரமோற்ஸவம் நிறைவடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காது ஜவ்வை கிழிக்கும் அரசியல் கட்சி கூட்டங்கள்; பல்லடம் வணிகர்கள் எதிர்ப்பு
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 2 பேர் ரூ.5 லட்சம் இழப்பு
-
போலீசார் விழிப்புணர்வு
-
இலவச மனைப்பட்டா குறித்து அதிகாரியுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
-
வள்ளலார் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
-
ரோட்டின் மையத்தில் பள்ளம் சீரமைக்க எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement