ஆந்திரா எம்.எல்.ஏ.,க்கள் அறுபடை வீடு பயணம்

மதுரை : ஆந்திரா துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் முருகபெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். அவரது உத்தரவுபடி நேற்று அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசித்தனர்.

நாட்டிற்காக போராடும் ராணுவத்திற்கும், நாட்டின் தலைமைக்கும் துணையாக தெய்வீக பலம் வேண்டி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. திருப்பரங்குன்றம், சுவாமி மலை என அறுபடை வீடுகளுக்கு தனித்தனியே எம்.எல்.ஏ.,க்கள் குழுக்களாக பஸ், கார்களில் புறப்பட்டு வந்து தரிசனம் செய்தனர். அவர்களை ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வரவேற்றனர்.

எலமஞ்சிலி தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரபு விஜயகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், திருப்பரங்குன்றத்திற்கு தேசியக்கொடி ஏந்தி சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

கொடிகளை கோயிலுக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என போலீசார் கூறினர். இதையடுத்து தேசியக்கொடியை கோயிலின் முன்பு வைத்துவிட்டு, தரிசனம் முடித்தபின் எடுத்துச் சென்றனர்.

Advertisement