பைக் எதிரே வந்ததால் கண்மாய்க்குள் பாய்ந்த பஸ்

காரைக்குடி : காரைக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு நேற்று அரசு பஸ் சென்றது. மதியம் 3:45 மணிக்கு தேவகோட்டை ரஸ்தா முன்பு செஞ்சை அருகே சென்ற போது எதிரே, பைக்கில் வந்த ஒருவர் பஸ்சில் மோதுவது போல வந்துள்ளார்.

இதனைக் கண்ட பஸ் டிரைவர் குமரேசன், இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பஸ்சை நிறுத்த முயற்சித்த போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த கண்மாயில் இறங்கியது. இதில், பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisement