குமரி - ஹவுரா, தாம்பரம் - நாகர்கோவில் ரயில்களை தினமும் இயக்க வலியுறுத்தல்
மதுரை : கன்னியாகுமரி - ஹவுரா, தாம்பரம் - நாகர்கோவில் ரயில்களை தினமும் இயக்க தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சனி தோறும் கன்னியாகுமரி - மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே வாராந்திர ரயில் (12666) இயக்கப்படுகிறது. அதிகாலை 5:50 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, வழியாக மாலை 6:50 மணிக்கு எழும்பூர் செல்கிறது. பின் விஜயவாடா, விசாகப்பட்டிணம், புவனேஸ்வர், கட்டாக் வழியாக ஹவுரா செல்கிறது. 2000ல் துவங்கப்பட்ட இந்த ரயில் சேவை சராசரியாக 184 சதவீத பங்களிப்புடன் பயணிகளிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தும் தற்போது வரை வாராந்திர சேவையாகவே தொடர்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் மதுரை, திருச்சி வழியாக ரயில்களை இயக்க அங்குள்ள அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த ரயில், காலை குமரியில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை செல்வதால் தினமும் இயக்கும் போது தென் மாவட்ட பயணிகளுக்கு சென்னை செல்ல பகல் நேர ரயில் சேவை கூடுதலாக கிடைக்கும்.
பயணிகள் கூறியதாவது: சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழிப்பாதை பணிகள் முடிந்துள்ளன. கன்னியாகுமரி ஸ்டேஷனில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டு விரிவாக்கப் பணிகள் முடிந்துள்ளன. இந்த ரயிலை பராமரிக்க நாகர்கோவில் ஸ்டேஷனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிட்லைன்களும் உள்ளன. எனவே கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்றனர்.
தாம்பரம் --- நாகர்கோவில்
தாம்பரத்தில் இருந்து (22657) சிறப்பு ரயில் திங்கள், புதன், ஞாயிறு கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 7:00 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் (22658) திங்கள், செவ்வாய், வியாழன் கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5:05 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு சென்றடைகிறது.
இந்த ரயில்களில் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அதிக பயணிகள் பயணிக்கின்றனர். தென் மாவட்ட மக்களின் பயணத்திற்கு ஏற்றதாக இந்த ரயில் உள்ளது. எனவே இந்த ரயிலை தினமும் இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரைக் கோட்டத்தில் இயக்கப்படும் முக்கிய ரயில்களில் பயணிகளின் காத்திருப்போர் பட்டியலைக் குறைக்கும் வகையில் ஒரு படுக்கை வசதிப் பெட்டி கூடுதலாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, இன்றும் (மே 14) நாளையும் துாத்துக்குடி - எழும்பூர் 'முத்துநகர்' (12694), திருவனந்தபுரம் - மதுரை 'அமிர்தா' (16343), இன்று முதல் மே 16 வரை எழும்பூர் - துாத்துக்குடி 'முத்துநகர்' (12693), நாளை, மே 16ல் மதுரை - திருவனந்தபுரம் 'அமிர்தா' (16344), இன்று தாம்பரம் - நாகர்கோவில் (22657), நாளை நாகர்கோவில் - தாம்பரம் (22658) ஆகிய ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்படுகிறது.
மேலும்
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!
-
இழப்பீடு வழங்க தாமதப்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம்