கொளுத்தும் வெயில் ஒரு நுங்கு 10 ரூபாய்

திருப்புவனம் : கடும் கோடை வெயில் காரணமாகவும் விளைச்சல் குறைவு காரணமாகவும் ஒரு நுங்கின் விலை பத்து ரூபாயாக உயர்ந்துள்ளது.

திருப்புவனம் வட்டாரத்தில் இலந்தைகுளம், கொந்தகை, மடப்புரம் என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பனை மரங்கள் இன்னமும் உள்ளன. செங்கல் தொழிற்சாலைகளில் எரிப்பதற்காக பல இடங்களில் பனை மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. கோடைகாலத்தில் பலரும் நுங்குகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே நுங்கு கிடைக்கும். கடந்தாண்டு ஒரு நுங்கு ஐந்து ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு பத்து ரூபாயாக உயர்ந்து விட்டது. வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க நுங்கு விலை இன்னமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Advertisement