மாநில அளவில் விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி போட்டி

சிவகங்கை: மாநில அளவில் நடைபெற உள்ள திருந்திய நெல் சாகுபடி போட்டியில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பங்கேற்கலாம் என வேளாண் இணை இயக்குனர் சண்முக ஜெயந்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநில பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு, முதலிடம் வரும் விவசாயிக்கு அரசு ரூ.5 லட்சம் பரிசு தொகை, ரூ.7,000 மதிப்புள்ள தங்க பதக்கம் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் குறைந்தது 2 ஏக்கர் பரப்பளவில் தொடர்ச்சியாக 3 ஆண்டு திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். நில உரிமையாளர், குத்தகைதாரர் இதில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். பயிர் அறுவடை தேதியை 15 நாட்களுக்கு முன் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம், என்றார்.

Advertisement