பழநியில் பால்குட ஊர்வலம்: வெள்ளி தேரோட்டம்

பழநி : பழநி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலிருந்து திரு ஆவணன்குடி கோயிலுக்கு 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று இரவு வெள்ளித்தேரோட்டமும் நடைபெற்றது.

பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலிருந்து சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் துவங்கியது.

கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார் துவங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருஆவினன்குடி கோயில் சென்றடைந்து.

அங்கு குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கட்டபொம்மன் அறக்கட்டளை நிறுவனர் செல்வ சுப்ரமணியன் குருக்கள், பில்டிங் கான்ட்ராக்டர் நேரு, சுந்தரம் கோயில் முன்னாள் கண்காணிப்பாளர் முருகேசன், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி ரஞ்சித் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்துநேற்று இரவு வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருள வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

Advertisement