தினமலர் செய்தி கிடைத்தது குடிநீர்

கொட்டாம்பட்டி : காரியேந்தல் பட்டியில் வசிக்கும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரு தெரு குழாய் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஆனால் ரூ. 16.75 லட்சத்தில் புதிதாக கட்டிய மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் சப்ளை செய்யாமல் காட்சிப் பொருளாக மாறியது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சங்கர் கைலாசம் ஏற்பாட்டின் பேரில் ஊராட்சி செயலர் மணிகண்டன் புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்ததால் மக்கள் மகிழ்ந்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

Advertisement