அகற்றப்பட்ட மாமரம்; கமிஷனர் ஆபீசில் மறுநடவு

திருப்பூர் ; ஆஷர் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மாமரம்,அகற்றி மறுநடவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி ரோடு, ஆஷர் நகர் பகுதியில் நன்கு வளர்ந்த நிலையில் ஒரு மாமரம் போக்கு வரத்துக்கு இடையூறாக இருந்தது.

இதனால், பொது மனித சமூக சேவை அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பினர், அந்த மரத்தை வேறிடத்தில் மறு நடவு செய்து அதை வளர்க்க முடிவு செய்தனர்.

அவ்வகையில் அந்த மரம் ஆஷர் நகர் பகுதி யிலிருந்து கிளைகள் வெட்டி, அகற்றும் பணி நடந்தது. பின்னர் அந்த மரம் ேவரோடு அகற்றி பாதுகாப்பான முறையில் வாகனத்தில் ஏற்றப்பட்டது. குமார் நகரில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தின் முன், மரம் கொண்டு சென்று மறு நடவு செய்யப்பட்டது.

இந்த சேவையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள், கணேஷ்குமார், சதீஷ், வினோத் மற்றும் பாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர்.

Advertisement