சிக்கன நீர் மேலாண்மைக்கு தோட்ட கலைத்துறை அழைப்பு
திருப்பூர்; கோடையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஏதுவாக, 100 சதவீத மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம் என, தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
சொட்டுநீர் பாசன திட்டத்தில், பயிருக்கு தேவையான நீர், உரம் போன்றவை பயிரின் வேர் பகுதிக்கு கிடைக்கிறது; சீரான வளர்ச்சி கிடைப்பதுடன், மகசூலும் அதிகளவு கிடைக்கும்.
குறு, சிறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படுகிறது. குறு, சிறு விவசாயிகள், ஐந்து ஏக்கர் வரையில் நிலம் வைத்துள்ளவர்கள், 100 சதவீத மானியத்துடன் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மூலனுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மூலனுார் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், குறு, சிறு விவசாயி என்ற சான்றிதழ் பெற்று, ரேஷன் கார்டு ஆதார், சிட்டா, அடங்கல், நிலவரைபடம், போட்டோ ஆகியவற்றுடன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 93857 94707, 88385 08679 என்ற எண்களில் அணுகலாம்,' என்று தெரிவித்துள்ளார்.
மேலும்
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!