ஆன்மிக சிந்தனையுடன் மக்கள் வாழ வேண்டும்!
திருப்பூர் : மக்கள் அனைவரும் ஆன்மிக சிந்தனையுடன் வாழ வேண்டுமென, மகாலட்சுமி சுவாமி அருளாசி வழங்கினார்.
திருப்பூர் அருகேயுள்ள ஸ்ரீமகாலட்சுமி கோவிலில், 34ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், மகாலட்சுமி சுவாமிகள் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், மகாலட்சுமிக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. பொங்கலுார் பிரபஞ்சானந்தா சுவாமிகள், பல்லடம் மூர்த்தி லிங்கேஸ்வர சுவாமி, கோவை பிரம்மரிஷி சுவாமிகள், எம்.எல்.ஏ., செல்வராஜ், வத்தலகுண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்ற வழிபட்டனர்.
உலகம் இன்று பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது; பல்வகை துன்பங்கள் சூழ்கின்றன. அவற்றில் இருந்து விடுபட, மக்கள் அனைவரும் ஆன்மிக சிந்தனையுடன் வாழ வேண்டும்.
இறைவழிபாடு, ஆன்மீக சொற்பொழிவுகள் அதிகம் நடத்தப்பட வேண்டுமென, மகாலட்சுமி சுவாமி அருளாசி வழங்கினார்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை