காவடி திருவிழா எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பரங்கிப்பேட்டை : பு.முட்லுார் ஆணையாங்குப்பம் வள்ளி, தெய்வானை சமேத செல்வமுத்துக்குமரசாமி கோவில் காவடி திருவிழாவை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் புற்றுமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், கரிக்குப்பம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் நடந்தது.
ஆணையாங்குப்பம் வள்ளி, தெய்வானை சமேத செல்வமுத்துக்குமரசாமி கோவிலில் காவடி திருவிழாவை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்து, அன்னதானம் வழங்கினார்.
மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், இளைஞரணி பொருளாளர் மகேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராம் மகேஷ், கிளை செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் மூர்த்தி, செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!