வைகாசி பட்டம் துவங்குகிறது; நாற்றுப்பண்ணைகள் சுறுசுறுப்பு

பொங்கலுார்; விரைவில் வைகாசி பட்டம் துவங்க உள்ளது. வைகாசி பட்டத்தில் தக்காளி, மிளகாய், கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

வைகாசி மாதத்தில் நீர்வளம் குறைந்து காய்கறி சாகுபடி பரப்பு சுருங்குவதால் விளைச்சல் குறையும். இதனால் வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பது வழக்கம்.

முன்பு விவசாயிகளே நாற்று தயார் செய்தனர். இதற்கு ஏற்படும் காலதாமதம் காரணமாக பலரும் நாற்றுப் பண்ணைகளில் வாங்கி நடவு செய்யத் துவங்கினர். திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் நாற்றுப் பண்ணைகள் செயல்படுகின்றன. இங்கு தயாராகும் நாற்றுகள் உள்ளூர் தேவை போக பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப் படுகிறது.

வைகாசி படத்தில் நடவு செய்வதற்காக பல விவசாயிகள் முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து முன் பதிவு செய்து வருகின்றனர். இதனால், நாற்றுப் பண்ணைகள் சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கியுள்ளன.

Advertisement