நீர் மோர் வழங்கல்

சின்னமனூர்; சின்னமனூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கோயில் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குவது வழக்கம். இதன்படி வீரபாண்டி சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான நேற்று 32வது ஆண்டு நீர் மோர் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. ஐயப்பா சேவா சங்க தலைவர் பெருமாள், செயலாளர் லோகேந்திரராசன் ஆகியோர் தலைமையில் நீர்மோர் வழங்கப்பட்டது. காலை முதல் மதியம் பக்தர்கள் நீர் மோர் பருகி சென்றனர்.

Advertisement