கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2

கார்பதோஸ்; கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கிரீஸ். இங்குள்ள கார்பதோஸ், காசோஸ் தீவுகளுக்கு அருகே 14 கி.மீ., ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. தொடக்கத்தில் இந்த நிலநடுக்கம் 6.4 ஆக ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.


பின்னர், 6.1 ஆக திருத்தி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அதிர்வின் பாதிப்புகள், இஸ்ரேல், துருக்கி, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.


முதல்கட்டமாக உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. இருப்பினும், அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement