மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

குள்ளஞ்சாவடி: மதுபாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை அப்பியம்பேட்டை, தங்களிக்குப்பம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

மதுபாட்டில் விற்ற அப்பியம்பேட்டை, மேற்கு தெருவை சேர்ந்த அன்பரசன், 39, தங்களிக்குப்பம், முருகன் கோயில் தெருவை சேர்ந்த ராஜவள்ளி, 65, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது வழக்கு பதிந்த போலீசார், 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement