குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்

1

திருப்பூர் : திருப்பூரில், குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் மனைவியிடம் போனில் அத்துமீறி பேசிய போலீஸ் ஏட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில், குற்றப் பிரிவு போலீஸ் ஏட்டாக நல்லசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.

நல்லுார் ஸ்டேஷனில் இவர் பணிபுரிந்துவந்தபோது, குற்ற வழக்கு ஒன்றில் தொடர்புடைய நபரின் மனைவியிடம், வழக்கு தொடர்பாக பேசுவதற்கு மொபைல் போன் எண்ணை வாங்கியிருந்தார்.

வழக்கு தொடர்பாக அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய நல்லசாமி, போனில் வரம்பு மீறியும், தவறான நோக்கத்துடனும் பேசியுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நல்லசாமியை, மாநகர ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Advertisement