ரூ.12 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

எருமப்பட்டி,

எருமப்பட்டி யூனியன், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு முட்டாஞ்‍செட்டி, எருமப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். இதேபோல், வெளியூரில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த, இரண்டு வாரமாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து வெகுவாக குறைந்தது. அதனால், நேற்று நடந்த சந்தையில், 12 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக, சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement