அரசியல் செய்ய வேண்டாம்!

மத்திய அரசு பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்க எம்.பி.,க்கள் குழுவை அமைத்துள்ளது. இதை புறக்கணிக்கும்படி சஞ்சய் ராவத் கூறுகிறார். தேசத்திற்கு பிரச்னை எழும்போது, ​​கட்சி அளவிலான அரசியலைத் தவிர்க்க வேண்டும்.

சரத் பவார்

தலைவர், தேசியவாத காங்.,

சரத் பவார் அணி

புறக்கணிக்கவில்லை!



பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை பல்வேறு நாடுகளுக்கு விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை என் கட்சி புறக்கணிக்கவில்லை. முறையான கோரிக்கை கிடைக்கப்பெற்றதும் பிரதிநிதிகளை அனுப்பி வைப்போம்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர்

முதல்வர் பதவி காலியில்லை!



பீஹாரில் முதல்வர் பதவி காலியாக இல்லை. வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் நிதீஷ் குமாரே கூட்டணி அரசுக்கு தலைமை வகிப்பார். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

சிராக் பஸ்வான்

மத்திய அமைச்சர்

லோக் ஜனசக்தி

Advertisement