விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் இருதய அறுவை சிகிச்சை பயிற்சி

புதுச்சேரி: தொழில்நுட்பவியலாளர் வார விழாவையொட்டி, விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி, சென்னை பையனூர் பகுதியில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் இருதய அறுவை சிகிச்சை செயல்முறை விளக்க பயிற்சி நடந்தது.

பல்கலைக்கழக வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேலம் விம்ஸ் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொழில்நுட்பவியலாளர் கலைவாணி கலந்து கொண்டு, இருதய அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சாதனங்கள் அவற்றின் செயல்பாடுகள் மற்றும் கையாளும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கினார்.

நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்களுக்கு படவிளக்காட்சி, மாதிரி வடிவ கண்காட்சி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில், இருதய அறுவை சிகிச்சை பிரிவு மாணவர்கள் கல்லுாரிக்கு ஏ.சி.,யை இலவசமாக வழங்கினர்.

ஏற்பாடுகளை கல்லுாரி இருதய அறுவை சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் ராகுல், ஆயிஷா செய்திருந்தனர்.

Advertisement