கனமழையால் மிதக்கிறது பெங்களூரு குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

பெங்களூரு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா, தமிழகத்தின் சில இடங்களில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாநிலங்களின் பல்வேறு இடங்களில் ஈரப்பதம் நிலவி வருகிறது. இது, மழை பொழிவையும் கொடுக்கிறது.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இரண்டாவது நாளாக இரவு முழுதும் கனமழை கொட்டி தீர்த்தது. அனைத்து சாலைகளிலும் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் 2 முதல் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது. வீட்டில் இருந்த, 'டிவி, பிரிஜ்' உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தண்ணீரில் மூழ்கின.
பல இடங்களிலும் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் இரவு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஒயிட்பீல்டு சன்னசந்திராவில் பெய்த கனமழையால் தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு வேலைக்கு வந்த சசிகலா, 35, என்ற பெண் உயிரிழந்தார். மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், கடந்த மூன்று நாட்களாக பெங்களூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
மேலும்
-
ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்; திரளான பக்தர்கள் தரிசனம்!
-
தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி
-
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை