சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; தேனி தொழிலாளி போக்சோவில் கைது

விருதுநகர் : விருதுநகர் அருகே கிராமத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிச்சைமணியை 47, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 4 வயதுடைய சிறுமி. இவரின் தாய் இறந்து விட்டதால் தனது பெரியம்மா வீட்டில் வளர்ந்து வருகிறார். மே 17ல் அருப்புக்கோட்டையில் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சிறுமியை அவரது சகோதரி, தந்தை அழைத்தனர்.

ஆனால் பெரியம்மாவுடன் வீட்டில் இருந்து கொள்வதாக கூறி சிறுமி செல்ல மறுத்து விட்டார். நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு வீட்டிற்கு வெளியே சிறுமி மலம் கழிக்க சென்றார். அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அச்சமடைந்த சிறுமி வீட்டிற்கு வந்து நடந்ததை பெரியம்மாவிடம் தெரிவித்தார். விருதுநகர் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்டவர் தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே வெள்ளையம்மாள்புரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி என்பதும், இவர் வாழைத் தோட்டத்தில் கூலித்தொழிலுக்காக வந்து சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. போலீசார் பிச்சைமணியை போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement