காங்கிரஸ் சிதம்பரத்துக்கு முட்டு கொடுக்கும் திருமாவளவன்

திருச்சி: ''காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்தும் நல்ல நோக்கத்தில் தான், அக்கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் கருத்து சொல்லியிருக்கலாம்,'' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முட்டுக் கொடுத்து பேசியுள்ளார்.
வலிமையாக இல்லை
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
மதச்சார்பின்மையை காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால், திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணியை அறிவித்தோம்.
அது, ஜூன் 14க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில், சட்டத்தின் மீது, மதச்சார்பின்மை மீது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும்.
பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்கிறது. ஜனாதிபதியை கொண்டு பா.ஜ., அரசு, 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் என்ற பெயரில் கேட்டுள்ளது.
இண்டி கூட்டணி வலிமையாக இல்லை என்று காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கூறியிருப்பது, அவருடைய சொந்த கருத்து தான்.
ஆனாலும், இண்டி கூட்டணியை இன்னும் கூடுதலாக வலுப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கம்தான் பின்னணியாக இருக்க வேண்டும். இண்டி கூட்டணி எம்.பி., தேர்தலை சந்தித்து ஓராண்டாகிவிட்டது.
தேவைப்படும் போது, அனைத்து கட்சிகளை சேர்ந்தோரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்ற வடிவத்தோடு உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, தேர்தல் வரை தொடருமா என்று தெரியவில்லை.
நிச்சயம் வெற்றி
அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிப்பதாக சொல்லப்படும் பா.ம.க., - தே.மு.தி.க., ஆகிய கட்சிகள், வரும் சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெறப் போகின்றன என்று உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை.
வரும் 2026 தேர்தலில், தி.மு.க., தலைமையிலான எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.



மேலும்
-
நள்ளிரவு பயணத்தால் கோர விபத்து; லாரி- பஸ் மோதி 4 பேர் பரிதாப பலி!
-
ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்; திரளான பக்தர்கள் தரிசனம்!
-
தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி
-
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை