மாரல் வித்யா மந்திர் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் அபாரம்  

புதுச்சேரி: கோர்க்காடு மாரல் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் மாணவர் கிரிதரன் 460 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், சுஷ்மிதா 442 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், திவ்யஷ் 434 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், சிரில் ரேமண்ட் 430 மதிப்பெண் பெற்று நான்காமிடம் பெற்றுள்ளனர். பள்ளியில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்கள் பெற்றுள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவி ஜெயசுவேதா 510 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

பள்ளியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் ரத்தனபிரியா ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி தாளாளர் கூறுகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 250 மதிப்பெண்கள் பெற்றவர்களையும், பிளஸ் 1 வகுப்பில் அவர்கள் விரும்பிய அறிவியல் குருப் கொடுத்து முதல் வகுப்பில் வெற்றி பெற செய்வதும், சாதாரண மாணவர்களையும் சாதனையாளர்களாக உருவாக்குவதே மாரல் வித்யா மந்திர் மேல்நிளைப்பள்ளியில் குறிக்கோள் என்றும், இந்த வெற்றி உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு நன்றிய தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Advertisement