அரசு பள்ளியில் தனியார் இசைக்கச்சேரி நடப்பதாக பரவும் தகவல் தவறானது: கலெக்டர் அறிவிப்பு கலெக்டர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி: அரசு பள்ளி வளாகத்தில் தனியார் இசைக் கச்சேரி நடப்பதாக பரவும் தகவல் தவறானது என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பகுதியில் தனியார் இசைக்கச்சேரி நடத்தப்பட இருப்பதாகவும், அதில் திரைப்பட பாடகர், சின்னத்திரை நடிகர் உள்ளிட்ட சிலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வைத்து எடுத்தது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. அரசு பள்ளி வளாகத்தில் தனியார் இசைக் கச்சேரி நடத்துவதற்கு அனுமதியா என பலர் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் இசைக் கச்சேரி நடத்தப்படுவதற்கு அரசு பள்ளி வளாகங்களை பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரவி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட எந்த அரசு சார்ந்த இடங்களிலும் தனிநபர் நிகழ்வுகள் நடத்துவதற்கு எவ்வித அனுமதியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கவில்லை. எனவே பொதுமக்கள் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement