பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர் கைது

ஊட்டி : ஊட்டியில் வடமாநில பெண்களை ஆபாச 'வீடியோ' எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த,5 இளம்பெண்கள் உணவு பரிமாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

அவர்கள் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்கள் உடை மாற்றியுள்ளனர். அப்போது வாலிபர் ஒருவர் மறைந்திருந்து 'வீடியோ' எடுப்பது தெரிய வந்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், வட மாநில இளம் பெண்கள் தங்கி இருந்த வாடகை வீட்டின் அருகில் உள்ள, மற்றொரு வீட்டில் வசித்து வந்த கிரிதரன்,35, என்பவர் வீடியோ எடுத்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், கிரிதரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement