பூட்டை உடைத்து திருடியவர் கைது 10 பவுன், 430 கிராம் வெள்ளி மீட்பு
திருச்செங்கோடு,: திருச்செங்கோடு டவுன், சூரியம்பாளையத்தில், கடந்த, 21 இரவு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி காசு, பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து, திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திருச்செங்கோடு பத்ரகாளி-யம்மன் கோவில் அருகே, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முர-ணாக பதிலளித்தார்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், பள்ளிப்பாளையம் அடுத்த ஆவத்தி
பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் மகன் கணேஷ், 48, என்பதும்; இவரும், இவரது நண்பர் சரவணன் என்பவரும் சேர்ந்து, திருச்செங்கோடு சூரியம்பாளையம் வீட்டில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து, பத்தே முக்கால் பவுன் தங்க நகை, 430 கிராம் வெள்ளி காசு, 25,000 ரூபாய் மற்றும் டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டை பறி-முதல் செய்தனர். பின், திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்