நீரேற்று நிலையம் அமைக்க பு.கவுண்டம்பட்டியில் ஆய்வு

குமாரபாளையம்: குமாரபாளையம் மக்களுக்கு, காவேரி நகர் பத்ரகாளியம்மன் கோவில் ஆற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் சுத்திக-ரிப்பு நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்தி-கரிப்பு செய்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோடைகாலங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் பற்றாக்-குறை காரணமாக, குடிநீர் வினியோகம் பாதிக்கிறது.

மேலும், நீர் உறிஞ்சும் இடத்தில் சாயக்கழிவு அதிகம் கலப்பதாக பொது-மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரண-மாக, நீர் உறிஞ்சும் இடத்தை, காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றாத நிலையில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் மாற்றம் செய்து, அங்கிருந்து காவேரி நகர் தலைமை சுத்திகரிப்பு நிலையத்-திற்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்ல திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.அதன்படி, மேற்கண்ட பணிக்கு, 15.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்-கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, புள்ளாக்கவுண்டம்பட்-டியில் புதிதாக நீரேற்று நிலையம் அமைக்கப்படும் இடத்தை குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன், நகர்மன்ற துணை தலைவர் வெங்க-டேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement